Tuesday, August 5, 2008

கவிதை

மின்மினியின் வாலிலேகண்மணியுன் காலிலேநான் ரசிப்பேன் வட்டமிடும் ஒளியையேநீ ரசிப்பாய் நோட்டமிடும் விழியையே.
பட்டுப் பட்டு விரலிலேதொட்டுச் செல்லும் குரலிலேநான் ரசிப்பேன் சின்னஞ் சிறு கிளியையேநீ ரசிப்பாய் எந்தன் சிறு மொழியையே.0
சந்திரன் வருகையில்ராத்திரி தருகையில்நான் விரிப்பேன் சுருட்டிவைத்த மோகத்தைநீ மறைப்பாய் உள்ளங்கைக்குள் வானத்தை.
சத்தங்களும் வீதியில்செத்துவிட்ட மீதியில்நான் கொடுப்பேன் வெட்கம் கெட்ட முத்தத்தைநீ கொடுப்பாய் சத்தமிடும் வெட்கத்தை.
0
வெக்கமாய் வெறிக்கையில்நெட்டி நீ முறிக்கையில்நான் விடுப்பேன் மீண்டுமொரு வேண்டுதல்நீ மறுப்பாய் மீண்டுமொரு தீண்டுதல்.
பக்கமாய் இருக்கையில்பக்குவம் பருகையில்நான் தொடுப்பேன் சின்னச் சின்ன சீண்டல்கள்நீ மறுக்கும் சத்தமெல்லாம் தூண்டல்கள்.
0
சின்ன அதிகாலையில்மின்னுமுந்தன் சேலையில்நான் பிடிப்பேன் மிச்சமுள்ள வாசனைநீ நடிப்பாய் செய்வதாக யோசனை.
சுருண்டுபோன போர்வையில்உருண்டுபோன வேர்வையில்நான் குடிப்பேன் ராத்திரியின் மிச்சமேநீ குடிப்பாய் எச்சிலூறும் அச்சமே.
0
கோழியும் அழைக்கையில்சூரியன் முளைக்கையில்நான் வியப்பேன் இரவு போன வேகத்தைநீ நினைப்பாய் இரவு வரும் நேரத்தை.
தேனிலா முடிகையில்வெண்ணிலா மடிகையில்நான் கடிவேன் தழைய மறுக்கும் தாகத்தைநீ முடிவாய் மூச்சு முட்டும் மோகத்தை.

No comments: