Tuesday, August 12, 2008

KANNEER THULIGAL

உனக்கு நான் அனுப்பியகண்ணீர்த் துளிகளைஉப்புத் தயாரிக்கனியுபயூகித்துக் கொண்டாய்.
இருட்டில்நடந்துகொண்டேஉன்நிழல் களவாடப்பட்டதாய்புலம்புகிறாய்
பாறைகளில்பாதம் பதித்துவிட்டுசுவடு தேடிசுற்றிவருகிறாய்.
நீபறக்கவிடும் பட்டத்தின்நூலறுந்ததை மறந்துவிட்டுவாலறுந்ததற்காய்வருந்துகிறாய்.
முதுமக்கள் தாழிக்குள்மூச்சடக்கி முடங்கிவிட்டுசுதந்திரக்காற்றுசிறைவைக்கப் பட்டதாய்அறிக்கைவிடுகிறாய்.
உன்இறகுகளை உடைத்துவிட்டுசிறைகள் திறக்கவில்லையென்றுவாக்குவாதம் செய்கிறாய்.
விரல்களை வெட்டிவிட்டுதூரிகைதொலைந்ததென்றுதுயரப்படுகிறாய்.
சில்லறைகளை சேகரிப்பதில்மூழ்கிவிட்டுமதிப்பீடுகளுக்குக்கல்லறை கட்டுகிறாய்.
நிறுத்திவிடு நண்பனே.நிறுத்திவிடு
சுவாசப்பையைசுத்தீகரிப்பதாய் நினைத்துநாசிகளுக்குள் இனியும்நீர் இறைக்கவேண்டாம்.

No comments: