கலவியின் பயன்கள்
காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் கலவியின் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்றை The National Health Service (NHS) வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலவி உடலை உறுதியாக்கி, இதய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று சிலிர்ப்பூட்டும் அறிக்கை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கிறது.
கலவியினால் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட கலவி குறைக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கலவியின் உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அதிக கலோரிகளை கலவி கரைக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில மருத்துவர்கள் இதை மறுக்கின்றனர். அறிவியல் பூர்வமாக இவை நிரூபிக்கப்படவில்லை என்ற அவர்களுடைய மறுப்புகளையெல்லாம் NHS நிராகரித்துவிட்டது. இவை நீரூபிக்கப்பட்ட உண்மைகளே என தனது தரப்பு வாதத்தை அது முன்வைக்கிறது.
இது மட்டுமன்றி கலவியினால் உடலில் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட கலவி வலுவூட்டுகிறதாம்.
நமது பழங்கால பஞ்சாங்கங்கள் சொல்வதற்கு நேர் மாறாக இந்த அறிக்கை இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
எப்படியோ, உற்சாகமான உடற்பயிற்சிகளும் உலகில் இருக்கின்றன என்பதை சொல்லும் இந்த அறிக்கையை கலவியர்கள் மன்னிக்கவும் காதலர்கள் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment