Tuesday, August 12, 2008

ஆழகு பெண்

அழகுப் பெண்ணே.
அழகுப் பெண்ணே.உனக்கு மட்டும்எப்படி வந்தது இத்தனை அழகு.
பூக்கள் பூக்களோடு மோதிமொட்டுக்களுக்குள்வாசனை ஊற்றும் அழகு.
தென்றல் தென்றலோடு மோதிசோலைகளுக்குச்சொடுக்கெடுக்கும் அழகு.
உன் கண்களைக் கண்டதும்ஓர்மின்னல்க்காடு முளைத்ததுஎன் மௌனத்தின் மனப்படுகைகளில்.
உன் அழகை எழுதஎத்தனிக்கும் போதெல்லாம்கனவுகள் வந்துவார்த்தைகளைக் கலைத்துச் செல்கின்றன.
கற்பனைகள் வந்துஎன் கவிதையை எடுத்துச் செல்கின்றன.
முத்துக்களை விழுங்கி நிற்கும்சின்னச் சிப்பியாய்வெட்கத்தில் புதைந்து கிடக்கிறதுஉன் ஆடை.
வானவில்லுக்கு சிறுவண்ணப்பொட்டிட்டதாய்உன் சின்னவிரலில்ஓர் சிங்கார மோதிரம்.
நதிகளுக்குள் சிறுரோஜா மிதப்பதாய்ஒற்றைக்காலில் மட்டும் உனக்குஒய்யாரக் கொலுசு.
இமைகளின் இடைகளிலும்மோகத்தீ ஊற்றி நிறைக்கும்உன்தங்கச் சங்கிலியின்தழுவல்ப் பிரதேசங்கள்.
நீஇமைத்து முடிக்கும்இடைவெளியில்கவனித்தவை தான் இவையெல்லாம்.மற்ற நேரங்களில்என் புதைகுழியே உன் இரு விழிதான்.
நீஒரு வார்த்தை பேசியிருந்தால்நான் ஒருவேளைமூர்ச்சையாகி மடிந்திருக்கலாம்.இல்லையேல்முக்தி நிலையில் முடிந்திருக்கலாம்.
எதுவும் நடக்கவில்லை..ஓராயிரம் வண்ணத்துப் பூச்சிகள்உற்சாக ஊர்வலம் செல்வதுபோல்செல்கிறாய்..எனைக் கடந்து.
என்னைத் தொடர்ந்தஎன் சுவடுகள்இப்போதுஎன்னை மட்டும்தன்னந்தனியாய் விட்டு விட்டுபயணித்துக் கொண்டிருக்கின்றன.

No comments: